/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஸ்ரீகாளிகாபுரத்தில் வங்கி கிளை துவக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
ஸ்ரீகாளிகாபுரத்தில் வங்கி கிளை துவக்க மக்கள் எதிர்பார்ப்பு
ஸ்ரீகாளிகாபுரத்தில் வங்கி கிளை துவக்க மக்கள் எதிர்பார்ப்பு
ஸ்ரீகாளிகாபுரத்தில் வங்கி கிளை துவக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 11, 2025 08:09 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அம்மையார்குப்பம், வங்கனுார், ஆர்.கே.பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில், 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, வங்கனுார் ஆகிய ஊராட்சிகளில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.
ஸ்ரீகாளிகாபுரத்தில் மட்டும் இதுவரை எந்தவொரு வங்கி கிளையும் திறக்கப்படவில்லை. இதனால், இங்கு வசிப்போர் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள வங்கிகளில் கணக்கு துவக்கியுள்ளனர்.
ஸ்ரீகாளிகாபுரத்தில் இருந்து சோளிங்கருக்கு போதுமான பேருந்து வசதி இல்லை. தடம் எண்: டி 65 என்ற அரசு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், வங்கிக்கு சென்றுவர பகுதிமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஸ்ரீகாளிகாபுரத்தில் இந்தியன் வங்கி கிளை திறக்கப்பட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.