/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரிபுரா தொழிலாளி கொலை விவகாரம் கஞ்சா போதையில் நடந்த கொடூரம்
/
திரிபுரா தொழிலாளி கொலை விவகாரம் கஞ்சா போதையில் நடந்த கொடூரம்
திரிபுரா தொழிலாளி கொலை விவகாரம் கஞ்சா போதையில் நடந்த கொடூரம்
திரிபுரா தொழிலாளி கொலை விவகாரம் கஞ்சா போதையில் நடந்த கொடூரம்
ADDED : அக் 11, 2025 12:35 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் கஞ்சா போதையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியை, அவரது நண்பரான பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் டிமான் சந்திரதாஸ், 30; கும்மிடிப்பூண்டி காந்தி நகரில் வசித்தபடி, பெயின்டிங் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை, அவர் வசிக்கும் அறையில் மார்பில் குத்துப்பட்டு இறந்து கிடந்தார்.
கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், அருகே உள்ள அறையில் வசித்தபடி, கொத்தனார் வேலை பார்க்கும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திலால் ஹரிஜன், 30, என்பவரும், டிமான் சந்திரதாசும், முதல் நாள் இரவு ஒன்றாக கஞ்சா புகைத்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
வலது கை விரல்களில் வெட்டு காயங்களுடன் இருந்த கார்த்திலால் ஹரிஜனிடம், போலீசார் விசாரித்ததில், அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'கஞ்சா போதையில் இருந்த இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் டிமான் சந்திரதாஸ், அவரது அறையில் இருந்த கத்தியால் தாக்க முயன்றபோது, தடுக்க முயன்ற கார்த்திலாலுக்கு கை விரல்கள் வெட்டுப்பட்டன.
'அவரிடமிருந்து கத்தியை பறித்த கார்த்திலால், டிமான் சந்திரதாசின் மார்பில் குத்தி கொலை செய்துள்ளார்' என, விசாரணையில் தெரிய வந்தது.
நேற்று காலை சம்பவ இடத்திற்கு கார்த்திலாலை போலீசார் அழைத்து சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியை கைப்பற்றினர்.
தொடர்ந்து, கார்த்திலாலை கோர்ட்டில் ஆஜர் செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.