/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் அதிருப்தியில் பேரம்பாக்கம் பகுதிவாசிகள்
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் அதிருப்தியில் பேரம்பாக்கம் பகுதிவாசிகள்
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் அதிருப்தியில் பேரம்பாக்கம் பகுதிவாசிகள்
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் அதிருப்தியில் பேரம்பாக்கம் பகுதிவாசிகள்
ADDED : நவ 23, 2024 01:44 AM

கடம்பத்துர்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் பஸ் நிலையம் அருகே நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து நகை கடை, மிக்சர் கடை, துணிக்கடை மற்றும் சாலையோரம் இயங்கி வந்த பழக்கடை, பூக்கடை என 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் , வருவாய்த்துறை அதிகாரிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு 'நோட்டீஸ்' அளித்தனர்.
ஆனால் கடைக்காரர்கள் யாரும் நீர்நிலையில் கட்டப்பட்ட கடைகளை அகற்ற முன்வரவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் திருவள்ளூர் வட்டாசியர் செ.வாசுதேவன், டி.எஸ்.பி., தமிழரசி ஆகியோர் தலைமையில், துணை வட்டாட்சியர் வி.நரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.மணிசேகர், செல்வகுமார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், போலீசார் ஆக்கிரமிப்பு பணிகளை ஜே.சி.பி., இயந்திரத்துடன் அகற்றும் பணி மேற்கொண்டனர்.
இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் வணிக வளாகம், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க கட்டிடம் உள்ளிட்ட 35 கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
ஆனால் பேருந்து நிலையம் எதிரே ஒராண்டாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளது பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓராண்டுக்கு முன் பெயரளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் வணிக நிறுவனங்கள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நீர்நிலை ஆக்கிரமிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென பேரம்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.