ADDED : அக் 29, 2024 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 106 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், 68 நிரந்தர பட்டாசு கடைகள் உள்ளன. மேலும், தற்காலிக பட்டாசு கடை அமைக்க இணையதளம் வாயிலாக, 90 விண்ணப்பம் பெறப்பட்டது. இவற்றில், நிரந்தர பட்டாசு கடைகளில், 58 கடைகளுக்கு விண்ணப்பம் புதுப்பித்து வழங்கப்பட்டு உள்ளது.
தற்காலிக பட்டாசு கடைகளுக்கு வரப்பெற்ற 90 விண்ணப்பத்தில், 22 நிராகரிக்கப்பட்டு, 48 விண்ணப்பத்திற்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.