/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபரை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
/
வாலிபரை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
ADDED : ஆக 15, 2025 02:01 AM

வெள்ளவேடு:வெள்ளவேடு அருகே வீட்டில் வளர்த்த நாய், வாலிபரின் மூக்கை கடித்து துண்டாக்கியது.
திருமழிசையில் இருந்து காவல்சேரி செல்லும் சாலையில் உள்ள அயன்சிட்டியில் கணேஷ், 35 என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். அங்கு கட்டுமான பொருட்கள் திருடு போகாமல் இருக்க, தன் வீட்டில் வளர்க்கப்படும் மூன்று நாய்களை அங்கு வைத்து பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கணேஷ் அந்த நாய்களுக்கு உணவு வைத்தார். அப்போது நாய் ஒன்று, அவரது கை, கால்களை கடித்த நிலையில் மூக்கின் வலது பகுதியை கடித்து துண்டாக்கியது.
படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணேஷை கடித்த நாய், வீட்டில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வில்லர் என்ற இனத்தை சேர்ந்தது என, போலீசார் தெரிவித்தனர்.