/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வளர்ப்பு நாய்களை பிடித்த ஆத்திரத்தில் பெண் போலீசாரை கடித்த உரிமையாளர்

ADDED : மார் 17, 2024 11:14 PM

வேளச்சேரி: அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, ஆண்டாள் அவென்யூவைச் சேர்ந்தவர் ஹேமலதா, 54. இவர் வீட்டில், இரண்டு ஆண்டுகளாக, 100க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்த்து வந்தார்.
இதனால், சுற்றி வசிப்போர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். இதனால் அப்பகுதியினர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
நீதிமன்ற உத்தரவுபடி, மாநகராட்சி சுகாதார துறை மற்றும் கால்நடை துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் நாயை பிடிக்க வந்தனர்.
பணியாளர்களை தடுத்து, ஹேமலதா பிரச்னை செய்தார். தரமணி போலீசார், அவரிடம் சமாதானம் பேசினர். அவர்களிடமும் அவர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்.
ஒரு கட்டத்தில், இரு பெண் போலீசாரின் கையை கடித்தும், பிடித்து தள்ளியும் அமர்க்களம் செய்தார்.
மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், நாய் பிடிக்கும் ஊழியர்கள், 25 நாய்களை பிடித்து, பெரம்பூர் நாய்கள் காப்பகம் எடுத்துச் சென்றனர். மீதமுள்ள நாய்கள், ஓரிரு நாளில் பிடிக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த ஹேமலதா மீது, தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.