/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பரிக்கப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பு தடுக்க கோரி ஜமாபந்தியில் மனு
/
பரிக்கப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பு தடுக்க கோரி ஜமாபந்தியில் மனு
பரிக்கப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பு தடுக்க கோரி ஜமாபந்தியில் மனு
பரிக்கப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பு தடுக்க கோரி ஜமாபந்தியில் மனு
ADDED : மே 28, 2025 11:43 PM
பொன்னேரி,
மீஞ்சூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பரிக்குப்பட்டு கிராமத்தில் உள்ள பாசன ஏரியில், பொன்னேரி நகராட்சியின் கழிவுநீர் விடப்படுகிறது. இதை தடுக்க கோரி, நேற்று கூடுவாஞ்சேரி முன்னாள் ஊராட்சி தலைவர் பிரியா, தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டு குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட சின்னகாவணம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கால்வாய் வழியாக நேரடியாக பரிக்குப்பட்டு ஏரியில் விடப்படுகிறது. ஏரியில் தேங்கியுள்ள தண்ணீருடன் கழிவுநீர் கலப்பதால், கால்நடைகளின் குடிநீர் ஆதாரம் பாதிக்கிறது.
ஏரியை சுற்றிலும் தண்ணீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் கழிவுநீர் கலந்து விடுகிறது. இதுதொடர்பாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஜமாபந்தியிலும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, இந்த முறையாவது உரிய நடவடிக்கை எடுத்து, பாசன ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
திருத்தணி
திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில், கடந்த 20ம் தேதி முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஜமாபந்தி விழாவில், பட்டாபிராமபுரம் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில், 'காசிநாதபுரம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழியிடம் மனு அளிக்கப்பட்டது.
பின், ஆர்.டி.ஓ.,விடம், 'சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு காசிநாதபுரம் ஏரியில், 5 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் எடுக்க கலெக்டர் அனுமதி அளித்துள்ளார்.
'ஆனால், 12 அடி ஆழத்திற்கு மேல் ஏரியில் மண் அள்ளப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே ஏரியில் மண் எடுப்பதை நிறுத்த வேண்டும்' என்றனர். இதற்கு ஆர்.டி.ஓ., கனிமொழி, 'ஏரியில் மண் எடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கலெக்டரிடம் கொண்டு செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும்' என்றார்.