/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்பணை அமைக்க கோரி மனு அளிப்பு
/
தடுப்பணை அமைக்க கோரி மனு அளிப்பு
ADDED : அக் 10, 2025 09:49 PM
ஊத்துக்கோட்டை:'ஆரணி ஆற்றின் நடுவே, வடதில்லை கிராமத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்' என, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. மாம்பாக்கம், பேரிட்டிவாக்கம், போந்தவாக்கம், அனந்தேரி, வேளகாபுரம் ஆகிய கிராம மக்கள், பல்வேறு தேவைகள் குறித்து மனுக்கள் வழங்கினர்.
திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர். இந்த முகாமில், ஆரணி ஆற்றின் நடுவே, வடதில்லை கிராமத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். 'நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.