ADDED : அக் 10, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மப்பேடு:கீழச்சேரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மப்பேடு அடுத்த கீழச்சேரியில், அரசு நிதியுதவி பெறும் பள்ளி அருகே, கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போதை பொருள் தடுப்பு தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பள்ளி அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், கொட்டையூரைச் சேர்ந்த ரூபன், 19, என்பதும், 500 ரூபாய் மதிப்புள்ள 39 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், மப்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ரூபனை ஆஜர்படுத்தி, கிளைச் சிறையில் அடைத்தனர்.