/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளவி கொட்டி மூதாட்டி பலி மூவர் காயம்
/
குளவி கொட்டி மூதாட்டி பலி மூவர் காயம்
ADDED : அக் 10, 2025 10:41 PM
திருவாலங்காடு, :கனகம்மாசத்திரம் அருகே நுாறு நாள் பணிக்கு சென்ற நால்வரை விஷ குளவி கொட்டியது.இதில் மூதாட்டி இறந்தார்.
திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சி தன்ராஜ் கண்டிகை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், 50க்கும் மேற்பட்டோர், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்து வந்தனர்.
அப்போது, அருகே உள்ள மரத்தில் இருந்த விஷ குளவிகள், திடீரென 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கொட்டியது.
இதில், மாத்தம்மா, 80, ஜானகிராமன், 55, ஆறுமுகம், 40, கோவிந்தன், 62, உள்ளிட்டோர் காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள், திருவள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். மூதாட்டி மாத்தம்மா, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.