/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உரிமம் இன்றி இயங்கிய பட்டாசு குடோனுக்கு 'சீல்'
/
உரிமம் இன்றி இயங்கிய பட்டாசு குடோனுக்கு 'சீல்'
ADDED : அக் 10, 2025 10:42 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே உரிமம் இன்றி இயங்கி வந்த பட்டாசு குடோனுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பட்டாசு கடை மற்றும் குடோன்களில் தாசில்தார் சுரேஷ்குமார், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
எளாவூரில் உள்ள பட்டாசு குடோனில் மேற்கொண்ட ஆய்வின் போது, உரிமம் இன்றி இயங்கியது தெரியவந்தது. விசாரணையில், எளாவூரை சேர்ந்த அமீர் பேகம் என்பவரின் பெயரில் உரிமம் பெற்றிருந்த நிலையில், அவர் கடந்த மே மாதம் உயிரிழந்தார்.
உரிமத்தை புதுப்பிக்காமல், அவரது மகன்கள் குதுரத் அலி மற்றும் சாகுல் அமீது ஆகியோர், பட்டாசு குடோனை நடத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து, ஆரம்பாக்கம் போலீசார் முன்னிலையில், வருவாய் துறையினர் அந்த குடோனுக்கு, 'சீல்' வைத்தனர்.