/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைந்தழுத்த மின் வினியோகம் கூடுதல் மின்மாற்றி அமைக்க மனு
/
குறைந்தழுத்த மின் வினியோகம் கூடுதல் மின்மாற்றி அமைக்க மனு
குறைந்தழுத்த மின் வினியோகம் கூடுதல் மின்மாற்றி அமைக்க மனு
குறைந்தழுத்த மின் வினியோகம் கூடுதல் மின்மாற்றி அமைக்க மனு
ADDED : நவ 13, 2025 08:21 PM
திருத்தணி: விவசாய கிணறுகளுக்கு குறைந்தழுத்த மின் வினியோகம் செய்வதை தடுப்பதற்கு, கூடுதல் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் மனு அளித்தனர்.
திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.
திருவள்ளூர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகித்தார்.
இதில், அகூர் கிராம விவசாயிகள் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
விவசாய கிணறுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புக்கு, குறைந்தழுத்த மின்சாரம் வழங்குவதால், மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை. சீரான மின்சாரம் வழங்குவதற்கு கூடுதல் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும்.
அதேபோல், மேற்கண்ட கிராமங்களில், 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து, உடைந்து விழும் அபாய நிலை உள்ளதால், புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும். மேலும், வயல்வெளிகளில் செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால், விபத்து அச்சத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, 10க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. 'இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேற்பார்வை பொறியாளர் சேகர் தெரிவித்தார்.

