/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புட்லுார் ரயில் நிலைய தேவைகள் பட்டியலிட்டு அதிகாரிகளிடம் மனு
/
புட்லுார் ரயில் நிலைய தேவைகள் பட்டியலிட்டு அதிகாரிகளிடம் மனு
புட்லுார் ரயில் நிலைய தேவைகள் பட்டியலிட்டு அதிகாரிகளிடம் மனு
புட்லுார் ரயில் நிலைய தேவைகள் பட்டியலிட்டு அதிகாரிகளிடம் மனு
ADDED : செப் 10, 2025 03:27 AM

புட்லுார்:புட்லுார் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் அடுத்த புட்லுார் ரயில் நிலையத்தில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து, ரயில் பயணியர் சங்கத்தினர், ரயில்வே நிர்வாகத்திற்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், புட்லுார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புட்லுாரில், அங்காள பரமேஸ்வரி கோவில், காக்களூர் தொழிற்பேட்டை உள்ளது. பக்தர்கள், தொழிலாளர்கள் என, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். புட்லுாரில் இருந்து, தினமும் 30,000க்கும் மேற்பட்டோர், ரயிலில் பயணம் செய்கின்றனர்.
ரயில் நிலையத்திற்கு தேவையான வசதிகள்:
l நடைமேம்பாலம் உயரமாக இருப்பதால் வயதானோர், லக்கேஜ் உடன் வருவோர், படியில் ஏற சிரப்படுகின்றனர். எனவே, 'லிப்ட்' வசதி அமைக்க வேண்டும்
l கணினி டிக்கெட் வழங்கும் மையம் இல்லாததால், விரைவு ரயில், 'ரிட்டர்ன்' டிக்கெட் கிடைப்பதில்லை. எனவே, முன்பதிவற்ற கணினி ரயில் மையம் வேண்டும்
l நடைமேடையை கடக்கும் வகையில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தில், புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் மட்டும் கூரை அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட பகுதியிலும், மழை காலத்திற்குள் கூரை அமைக்க வேண்டும்
l ரயில் நிலையத்தின் நடைமேடை முழுதும் நீண்ட கூரை அமைக்க வேண்டும்
l கட்டண கழிப்பறை அமைக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஸ்டால் ஏற்படுத்திதர வேண்டும்
l அனைத்து நடைமேடையிலும், ரயில் வரும் தகவல் அறிய மின்னணு பலகை வைக்க வேண்டும். தொழிற்பேட்டை மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் வகையில், நான்காவது நடைமேடை அமைக்க வேண்டும்
l ரயில் வருகை மற்றும் புறப்படுவது குறித்து, ஒலிபெருக்கியில் தகவல் தெரிவிக்க வேண்டும். மின்னணு அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்
l 'சிசிடிவி' கேமரா பொருத்தி, ரயில்வே பாதுகாப்பு படையினர், 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.