/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மனு
/
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மனு
ADDED : மே 20, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று புதிதாக டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பட்டாபிராமபுரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ஆண்கள், 'டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது' என, கடையை முற்றுகையிட்டனர்.
பின், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழியிடம், 'பட்டாபிராமபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அனுமதிக்கக் கூடாது' என, மனு அளித்தனர். மனுவை பெற்ற ஆர்.டி.ஓ., 'நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.