/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்க மனு
/
அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்க மனு
அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்க மனு
அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்க மனு
ADDED : பிப் 13, 2024 06:29 AM
மீஞ்சூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, பல்வேறு அரசு பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. வரும் ஜூலை மாதம் குருப் -4 தேர்வு நடைபெற உள்ளது.
இதில் கிராமப்புற இளைஞர்கள் பங்கு பெறுவதற்கு ஏதுவாக மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில், பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என மீஞ்சூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் அபுபக்கர், நேற்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளார்.
மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சுற்றிலும், நெய்தவாயல், கொரஞ்சூர், வாயலுார், வெள்ளம்பாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், கற்போர் வட்டம் சார்பில், அரியன்வாயல் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் உள்ளது.