/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே போலீஸ் நிலையம் பொன்னேரி, மீஞ்சூரில் அமைக்க மனு
/
ரயில்வே போலீஸ் நிலையம் பொன்னேரி, மீஞ்சூரில் அமைக்க மனு
ரயில்வே போலீஸ் நிலையம் பொன்னேரி, மீஞ்சூரில் அமைக்க மனு
ரயில்வே போலீஸ் நிலையம் பொன்னேரி, மீஞ்சூரில் அமைக்க மனு
ADDED : பிப் 02, 2025 08:19 PM
பொன்னேரி:கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில், பொன்னேரி, மீஞ்சூர், எண்ணுார் உள்ளிட்ட, 17 ரயில் நிலையங்கள் உள்ளன. ரயில் நிலையங்கள், புறநகர் ரயில்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும், கொருக்குப்பேட்டையில் ரயில்வே போலீஸ் நிலையம் அமைந்து உள்ளது.
கொருக்குப்பேட்டையில் இருந்து, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய ரயில் நிலையங்கள், 40 -50 கி.மீ., தொலைவில் உள்ளன.
இதனால் கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான மோதல், வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்கள் உடனடியாக வந்து பிடிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
மேலும், ரயில்களில் சிக்கி இறப்பவர்களின் சடலங்களையும் உடனுக்குடன் மீட்க முடியாமல் அவை நீண்ட நேரம் தண்டவாளங்களின் ஓரங்களில் காத்துக் கிடக்கின்றன.
பொன்னேரி, மீஞ்சூர் ரயில் நிலையங்களில், ரயில்வே போலீஸ் நிலையம் அமைத்து பயணியர் பாதுகாப்பிற்கு உதவ வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பாக, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் பயணியர் சங்கத்தின் சார்பில், ரயில்வே காவல்துறை தலைவர் பாபுவிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
மனுவில் உள்ளதாவது:
புறநகர் ரயில்களில் மூன்றாம் பாலினத்தவர் பயணியரை அச்சுறுத்தி பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இரவு நேரங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும், காவலர்களை நியமிக்க வேண்டும்.
மாலை - இரவு நேரங்களில், அனைத்து ரயில்களிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவேண்டும். புறநகர் ரயில்களில் ஏறும், இறங்கும் இடங்களில் அமர்ந்து, மற்ற பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் உள்ளது.