/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீட்டு நடத்தி வீட்டுமனை தருவதாக மோசடி பாதிக்கப்பட்டோர் எஸ்.பி., யிடம் மனு
/
சீட்டு நடத்தி வீட்டுமனை தருவதாக மோசடி பாதிக்கப்பட்டோர் எஸ்.பி., யிடம் மனு
சீட்டு நடத்தி வீட்டுமனை தருவதாக மோசடி பாதிக்கப்பட்டோர் எஸ்.பி., யிடம் மனு
சீட்டு நடத்தி வீட்டுமனை தருவதாக மோசடி பாதிக்கப்பட்டோர் எஸ்.பி., யிடம் மனு
ADDED : செப் 26, 2024 01:45 AM

திருவள்ளூர்:பள்ளிப்பட்டு, கிருஷ்ணமாராஜகுப்பம், கன்னிகாம்பாபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் - சரஸ்வதி தம்பதி மற்றும் உறவினரான பிரகாஷ் ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
இவர்கள், தங்களிடம் ஏலச்சீட்டு திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தால், திருத்தணி, திருப்பதி, ரேணிகுண்டா, பெங்களூரு, பள்ளிப்பட்டு போன்ற பகுதிகளில் வீட்டுமனை தருவதாக கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து பீரக்குப்பம், கோரமங்கலம், மாம்பாக்கம், திருத்தணி போன்ற சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர், ஓராண்டாக ஏலச்சீட்டு திட்டத்தில் சேர்ந்து, மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், மூவரும் ஏலச்சீட்டு திட்டத்தில் பணம் கொடுத்தவர்களுக்கு உரிய முறையில் வீட்டுமனை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
பணம் கட்டியவர்கள் கேட்டபோது, அவர்கள் சரியான பதில் சொல்லாமல், 1 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு, மூவரும் தலைமறைவாகிவிட்டனர்.
மேலும், பணம் கட்டியவர்களுக்கு போலியான ரசீதுகள், அக்ரிமென்ட் காப்பி போன்றவற்றை கொடுத்து ஏமாற்றி உள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர், நேற்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாளிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட எஸ்.பி., 'மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.