/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூருக்கு அறிவித்த குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக முதல்வரிடம் மனு

ADDED : ஏப் 19, 2025 09:57 PM
மீஞ்சூர்:பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில், நேற்று முன்தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவரது கார், சென்னையில் இருந்து மீஞ்சூர் வழியாக பொன்னேரி சென்றது.
மீஞ்சூரில் கூடியிருந்த மக்களிடம், வாகனத்தில் இருந்தபடியை மனுக்களை பெற்றார். இதில், மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கத்தின் சார்பில், மீஞ்சூர் பகுதிக்கு அரசு அறிவித்த குடிநீர் திட்ட பணிகளை துவக்க வேண்டும் என, முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்தாண்டு சட்டசபை நிகழ்வின்போது, 'மீஞ்சூர் பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து, குடிநீர் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை.
காட்டூர் - திருப்பாலைவனம் சாலையில், ரயில்வே மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மீஞ்சூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லை. ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற இயலாத சூழ்நிலை உள்ளது.
மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை வழியாக, கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.