/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குரங்குகள் தொல்லை கலெக்டரிடம் மனு
/
குரங்குகள் தொல்லை கலெக்டரிடம் மனு
ADDED : ஜன 21, 2025 07:05 PM
ஊத்துக்கோட்டை:நயப்பாக்கம் கிராமத்தில், குரங்குகள் கடித்து பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள், கலெக்டர் பிரபுசங்கரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
மனு விபரம்:
திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பிடிக்கப்படும் குரங்குகளை பிடித்து வனத்துறையினர் பூண்டி காப்பு காட்டில் விடுகின்றனர். இவ்வாறு விடப்படும் குரங்குகள் காப்பு காடு அருகே உள்ள நயப்பாக்கம் கிராமத்தில் சென்று விடுகிறது.
உணவிற்காக அங்கு செல்லும் குரங்குகள் உணவு கிடைக்காத கோபத்தில் பொதுமக்களை கடித்து விடுகிறது. மேலும், பள்ளிகளுக்குள் செல்லும் குரங்குகள் மாணவர்களை கடித்து விடுகிறது. அப்பகுதியைச் சேரந்த சின்னபொன்னு, 45, விமலா, 35, ஆகிய இருவரின் கை, தலை ஆகிய பகுதிகளில் கடித்து விட்டது.
இதேபோல, இப்பகுதியில் உள்ள, 15க்கும் மேற்பட்டோரை குரங்குகள் கடித்து விட்டன. வியாபாரிகள் கையில் கம்புடன் வியாபாரம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, பொதுமக்கள், மாணவர்களை அச்சுறுத்தும் குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.