/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி கழிப்பறை படுமோசம் புதிதாக கட்ட எம்.எல்.ஏ.,விடம் மனு
/
அரசு பள்ளி கழிப்பறை படுமோசம் புதிதாக கட்ட எம்.எல்.ஏ.,விடம் மனு
அரசு பள்ளி கழிப்பறை படுமோசம் புதிதாக கட்ட எம்.எல்.ஏ.,விடம் மனு
அரசு பள்ளி கழிப்பறை படுமோசம் புதிதாக கட்ட எம்.எல்.ஏ.,விடம் மனு
ADDED : மார் 13, 2024 10:59 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பாலவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி, 120 ஆண்டுகள் பழமையானது. இங்கு, ஐந்து வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. மாணவர்கள் இயற்கை உபாதைகள் கழிக்க கழிப்பறை உள்ளது.
இந்த கழிப்பறை கட்டப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், மாணவர்கள் அச்சத்துடன் கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பங்கேற்று, பேனா, பென்சில், நோட்டு புத்தகம் ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது, பள்ளி தலைமையாசிரியர் சிந்தாமணி தலைமையிலான ஆசிரியர்கள், 100 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் கழிப்பறை கட்டடம் சேதமடைந்துள்ளது.
எனவே, புதிய கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்ற எம்.எல்.ஏ., புதிய கழிப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

