/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிசியோதெரபி படித்தவரின் 'கிளினிக்' 10 ஆண்டுக்குப்பின் 'சீல்' வைப்பு
/
பிசியோதெரபி படித்தவரின் 'கிளினிக்' 10 ஆண்டுக்குப்பின் 'சீல்' வைப்பு
பிசியோதெரபி படித்தவரின் 'கிளினிக்' 10 ஆண்டுக்குப்பின் 'சீல்' வைப்பு
பிசியோதெரபி படித்தவரின் 'கிளினிக்' 10 ஆண்டுக்குப்பின் 'சீல்' வைப்பு
ADDED : ஆக 29, 2025 12:35 AM
ஆவடி :பட்டாபிராமில், பிசியோதெரபி படித்து விட்டு 10 ஆண்டுகளாக அலோபதி வைத்தியம் அளித்து வந்த கிளினிக்கிற்கு, மருத்துவத்துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
ஆவடி அடுத்த பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 43; ஈவென்ட் மேனேஜ்மென்ட் தொழில் செய்து வருகிறார்.
இவர், கடந்த 26ம் தேதி இரவு, வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில், தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது.
பட்டாபிராம், அணைக்கட்டுசேரியில் உள்ள எம்.என்.டி., கிளினிக் சென்று மருத்துவம் பார்த்துள்ளார். அங்கிருந்த ஞானாம்பாள் என்பவர், வலி நிவாரணி ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து அனுப்பியுள்ளார்.
வெங்கடேஷ், வீட்டுக்கு வந்தபோது, திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரிசோதித்த மருத்துவர்கள் தவறான மருந்து கொடுத்ததால், வயிற்று வலி ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், ஞானாம்பாள் கிளினிக்கிற்கு சென்று கேட்டபோது, அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து, பட்டாபிராம் போலீசாருக்கும், மருத்துவ கவுன்சிலுக்கும் வெங்கடேஷ் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் அம்பிகா, கிளினிக்கிற்கு சென்று விசாரணை நடத்தினார். ஞானாம்பாள், 47, என்பவர் பிசியோதெரபி படித்துவிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிளினிக்கிற்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.