/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்
/
மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : அக் 06, 2025 02:08 AM

திருவாலங்காடு:சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், நாராயணபுரம் மேம்பாலத்தில் மண் குவிந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் நாராயணபுரம் கிராமம் அமைந்துள்ளது. தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் உள்ள நாராயணபுரம் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு பகுதியில் மண் குவிந்துள்ளது. கனரக வாகனங்களுக்காக, இரு சக்கர வாகன ஓட்டிகள் விலகி செல்லும் போது, அச்சத்துடன் சென்று வருகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து, மண் குவியலை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.