/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் வளர்ந்த முட்செடிகளால் அபாயம்
/
நெடுஞ்சாலையில் வளர்ந்த முட்செடிகளால் அபாயம்
ADDED : அக் 06, 2025 02:09 AM

திருத்தணி:திருத்தணி இந்திரா நகர், கன்னிகாபுரம் வழியாக, மாம்பாக்க சத்திரம் வரை செல்லும் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகள், வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில், தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இச்சாலையை திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர். கன்னிகாபுரம் இருளர் காலனி பகுதியில் இருந்து மாம்பாக்கசத்திரம் கூட்டுச்சாலை வரை, 4 கி.மீ., வரை, சாலையின் இருபுறமும் செடிகள் மற்றும் முட்செடிகள் வளர்ந்துள்ளன.
இப்பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட இடத்தில் வளைவுகள் உள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி, காயமடைந்து வருகின்றனர்.
சாலையை மறைத்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பலமுறை திருத்தணி நெடுஞ்சாலை துறையினரிடம் தெரிவித்தும் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
எனவே, பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படும் முன், சாலையோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.