/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் தேக்கம், பன்றிகள் உலா ஊத்துக்கோட்டையில் சீர்கேடு
/
கழிவுநீர் தேக்கம், பன்றிகள் உலா ஊத்துக்கோட்டையில் சீர்கேடு
கழிவுநீர் தேக்கம், பன்றிகள் உலா ஊத்துக்கோட்டையில் சீர்கேடு
கழிவுநீர் தேக்கம், பன்றிகள் உலா ஊத்துக்கோட்டையில் சீர்கேடு
ADDED : அக் 06, 2025 02:11 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் தேங்கியுள்ள கழிவுநீர், தெருக்களில் பன்றிகள் ஜாலியாக உலா வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், கால்வாய் தூர்ந்துள்ளது.
பஜார் பகுதியில் சாலையின் இரண்டு பக்கமும், மழைநீர் கால்வாய்க்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால், சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு உள்ளிட்ட காரணங்களால், சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து வருவதால், கழிவுநீருடன் மழைநீர் கலந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பன்றிகள் கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமா க உள்ளது. எனவே, கால்வாய் அடைப்பு மற்றும் பன்றிகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும் என, குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.