/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலத்தில் மண் குவியல் புழுதி பறப்பதால் அவதி
/
பாலத்தில் மண் குவியல் புழுதி பறப்பதால் அவதி
ADDED : மே 17, 2025 02:14 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த காரனோடையில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் ஓரங்களில் மணல் குவிந்து கிடக்கிறது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர், மணல் குவியலில் சிக்கி தடுமாற்றம் அடைகின்றனர். இதனால், பாலத்தின் ஓரங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த மண் குவியல் புழுதியாக மாறி, வாகன ஓட்டிகள் கண்களை பதம்பார்க்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி தவிக்கின்றனர். மணல் குவியலால், இரவு நேர பயணத்தின்போது கூடுதல் சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, பாலத்தின் ஓரங்களில் உள்ள மண் குவியலை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.