/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை ஆற்றில் குழாய் பதிக்கும் பணி தீவிரம்
/
கொசஸ்தலை ஆற்றில் குழாய் பதிக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 01, 2025 10:28 PM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் இருந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, குழாய் பதிக்கும் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருகின்றன.
ஆர்.கே.பேட்டை, யு.ஆர்.ஆர்.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டப்பட்டு வருகின்றன. பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே, கொசஸ்தலை ஆற்றில் இருந்து நீரேற்று நிலையத்திற்கு குழாய் இணைப்பு ஏற்படுத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.
பள்ளிப்பட்டில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை மார்க்கத்தில், ஏற்கனவே சாலையோரத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. தரைப்பாலங்கள் குறுக்கிடும் பகுதியில் குழாய்களுக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆற்றின் குறுக்கே குழாய் பதிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த குழாய் ஒரு அடி விட்டம் கொண்ட பி.வி.சி., குழாய்களாக அமைந்துள்ளது. இந்த நீர்வழித்தடத்தில், அழுத்தம் குறைக்கும், ‛பிரஷர் வால்வு'களும் இணைக்கப்பட்டு வருகின்றன.

