ADDED : மார் 26, 2025 07:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் திலகவதி பசுமை இயக்கம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகாவில் உள்ள அரசு அலுவலக வளாகங்கள், கோவில் வளாகம் என, 16 ஆண்டுகளாக நடவு செய்யப்பட்டு வருகின்றன.
நடவு செய்ய போதிய இடவசதியும், பராமரிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது. அதன்படி, நேற்று ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில், 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
நிழல் தரும் மரங்கள் மட்டும் இல்லாமல், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு பயன்படும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. ராஜாநகரம் அரசு பள்ளியில், நேற்று ஆல், அரசு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.