/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை தடுப்பை தாண்டி வளர்ந்துள்ள செடி, கொடிகள்
/
சாலை தடுப்பை தாண்டி வளர்ந்துள்ள செடி, கொடிகள்
ADDED : அக் 14, 2025 11:50 PM

பள்ளிப்பட்டு:ஏரிக்கரை சாலையில் நிறுவப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை தாண்டி, சாலை வரை வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து ஏரிக்கரை வழியாக பொதட்டூர்பேட்டைக்கு தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்த ஏரிக்கரை சாலையில் விபத்துகளை தவிர்க்கும் விதமாக, நெடுஞ்சாலைத் துறை சார்பில் இரும்பு தடுப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
தற்போது இந்த தடுப்புகளையும் தாண்டி, செடி, கொடிகள் சாலை வரை வளர்ந்துள்ளன. இதனால், எதிரெதிரே வாகனங்கள் வரும் போது நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் ஒதுங்க இடம் இன்றி தவிக்கின்றனர்.
விபத்துகளை தவிர்க்கும் விதமாக, இரும்பு தடுப்புகளை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.