/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதுச்சத்திரத்தில் செடிகள் வளர்ந்து மருந்தகம், குடிநீர் தொட்டி மாயம்
/
புதுச்சத்திரத்தில் செடிகள் வளர்ந்து மருந்தகம், குடிநீர் தொட்டி மாயம்
புதுச்சத்திரத்தில் செடிகள் வளர்ந்து மருந்தகம், குடிநீர் தொட்டி மாயம்
புதுச்சத்திரத்தில் செடிகள் வளர்ந்து மருந்தகம், குடிநீர் தொட்டி மாயம்
ADDED : மார் 18, 2025 12:43 AM

புதுச்சத்திரம்; பூந்தமல்லி ஒன்றியம் கொரட்டூர் ஊராட்சி புதுச்சத்திரம் பகுதியில், கடந்த 2011 - 12ம் ஆண்டு நபார்டு தொகுதி ஒதுக்கீடு திட்டத்தின் கீழ், 26.66 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்நடை மருந்தகம் கட்டப்பட்டது.
இந்த கால்நடை மருந்தகத்தை, கடந்த 2013 நவ., 6ம் தேதி, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த கால்நடை மருந்தகத்திற்கு புதுச்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வந்து செல்கின்றனர்.
கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், தற்போது வரை எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து, கட்டடம் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. இதனால், கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வரும் பகுதிவாசிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
மேலும், கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு வரும் கால்நடைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக, ஊரக வளர்ச்சி துறை சார்பில், 2020 -21ல் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 20,000 ரூபாய் மதிப்பில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
முறையான பராமரிப்பு இல்லாததால், கால்நடை குடிநீர் தொட்டியும் தண்ணீரின்றி, செடி, கொடிகள் வளர்ந்து மாயமாகி உள்ளது. இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுச்சத்திரம் கால்நடை மருந்தகத்தை ஆய்வு செய்து, செடி, கொடிகளை அகற்றி, கால்நடை குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.