/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேவனேரி வனப்பகுதியில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்
/
தேவனேரி வனப்பகுதியில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்
தேவனேரி வனப்பகுதியில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்
தேவனேரி வனப்பகுதியில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்
ADDED : நவ 12, 2024 07:21 AM

சோழவரம்: சோழவரம் அடுத்த தேவனேரி கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் குப்பை, கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிக அளவில் உள்ளன. இதனால் வனப்பகுதியில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
கடைகள், தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக கையாளமால் இங்கு கொண்டு வந்து கொட்டி குவிக்கப்படுகிறது.
இவை அதிகளவில் சேரும்போது தீ வைத்து எரிக்கவும் செய்கின்றனர். அச்சமயங்களில் துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளின் சுகாதாரமும் பாதிக்கிறது.
தேவனேரி, ஆத்துார், எருமைவெட்டிப்பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து ஆடு, மாடு உள்ளிட்டவைகள் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
ஆங்காங்கே குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் உண்ணும்போது அவற்றிற்கும் சுகதார பாதிப்புகள் ஏற்படுகிறது.
வனப்பகுதியை சீரழித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றவும், அவற்றை கொட்டுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்று சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.