/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாய்கங்கை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்
/
சாய்கங்கை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்
ADDED : டிச 06, 2025 06:32 AM

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் சாய்கங்கை கால்வாய் முழுதும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
தமிழக - ஆந்திர அரசுகள் இடையே கடந்த, 1983ம் ஆண்டு கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும், இரண்டு தவணைகளில், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும்.
இதற்காக கண்டலேறு அணையில் இருந்து, வெங்கடகிரி, ராப்பூர், காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியே,தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் கடந்து, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் வரை, 177 கி.மீட்டர் துாரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது.
இப்பணி, 13 ஆண்டுகள் நடந்த நிலையில், 1996ம் ஆண்டு முதல் ஆந்திர அரசு கிருஷ்ணா நீர் வழங்கி வருகிறது.
கால்வாய்களில் ஏற்பட்ட சேதத்தால், தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வருவது தாமதம் ஆனது. இதைத் தொடர்ந்து புட்டப்பர்த்தி சாய்பாபா டிரஸ்ட் மூலம் கால்வாய் சீரமைக்கப்பட்டது.
இதன் காரணமாக சாய்கங்கை கால்வாய் என அழைக்கப்படுகிறது.
கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள், குப்பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றை கால்வாய்களில் வீசி வருகின்றனர்.
இவை அனைத்தும் சேர்ந்து, ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் கிராமத்தில் உள்ள கால்வாயில் சேர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் மாசுபடிந்துள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

