/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலத்தில் தொங்கும் மின் கம்பங்கள்: 'கட்டு' போட்டு பாதுகாக்கும் மக்கள்
/
பாலத்தில் தொங்கும் மின் கம்பங்கள்: 'கட்டு' போட்டு பாதுகாக்கும் மக்கள்
பாலத்தில் தொங்கும் மின் கம்பங்கள்: 'கட்டு' போட்டு பாதுகாக்கும் மக்கள்
பாலத்தில் தொங்கும் மின் கம்பங்கள்: 'கட்டு' போட்டு பாதுகாக்கும் மக்கள்
UPDATED : ஆக 30, 2025 10:59 AM
ADDED : ஆக 29, 2025 11:58 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே, ரயில்வே மேம்பாலத்தில் ஆபத்தாக உடைந்து தொங்கும் மின் கம்பங்களை, கீழே விழாத வகையில், அப்பகுதி மக்கள் கயிறு மூலம் கட்டி பாதுகாத்து வருகின்றனர். இந்த மின்கம்பங்களால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. கும்மிடிப்பூண்டி நகரையும், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் பாலமாக உள்ளது.
மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர். இவ்வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடந்து செல்கின்றனர். மேம்பாலத்தில், 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் இருந்தன.
கடந்த 2023ம் ஆண்டு புயலின் போது, மூன்று மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மற்ற மின் கம்பங்கள் இரண்டு ஆண்டுகளாக துருப்பிடித்து, உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.
தற்போது, இரு மின்கம்பங்கள் உடைந்து, மேம்பாலத்தில் சாய்ந்தபடி இரண்டு மாதங்களாக ஆபத்தான நிலையில் உள்ளன.
அதில், ஒரு மின் கம்பம், மேம்பாலத்தின் கீழ் உள்ள பெத்திக்குப்பம் கிராம சாலையில், எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது. மற்றொரு மின் கம்பம், மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளை பதம்பார்க்கும் வகையில் விழுந்து கிடக்கிறது.
எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் மக்களின் நலன் கருதி, இரண்டு மின்கம்பங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும். மீதமுள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.