/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடையை மறைத்து வைத்துள்ள பிளக்ஸ் பேனர்
/
நிழற்குடையை மறைத்து வைத்துள்ள பிளக்ஸ் பேனர்
ADDED : பிப் 17, 2025 11:12 PM

திருவாலங்காடு,
திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அடுத்து அமைந்துள்ளது கூடல்வாடி கிராமம். இங்குள்ளோர் மற்றும் நார்த்தவாடா கிராமத்தினர்.
சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்துக்காக காத்திருப்போர், வெயில், மழையில் இருந்து பாதுகாப்பாக நிற்க பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணியர் நிழற்குடையை மறைத்தபடி சிலர், 'பிளக்ஸ் பேனர்' வைத்து வருகின்றனர். இது பயணியருக்கு இடையூறாக உள்ளதால் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, இடையூறாக உள்ள பிளக்ஸ் பேனரை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

