/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிரதமர் பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு
/
பிரதமர் பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 11, 2025 09:45 PM
திருவள்ளூர்,:பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில், விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், நடப்பு 2025- - 26ம் நிதியாண்டில், காரீப் பருவத்தில் நெல்- சொர்ணவாரி கம்பு, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.
தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி மற்றும் வெண்டை போன்ற பயிர்களுக்கு, காரீப் பருவத்தில் காப்பீடு செய்யலாம்.
சொர்ணவாரி நெற்பயிருக்கு ஏக்கருக்கு 726 ரூபாய், காரீப் பருவ பயிர்களான கம்பு ஏக்கருக்கு 240, பச்சைப்பயறு 438, நிலக்கடலை 624, உளுந்து 438 ரூபாய் காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதும்.
மேற்குறிப்பிட்ட பயிர்களை காப்பீடு செய்ய, ஜூலை 31ம் தேதி கடைசி. விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது பொது சேவை மையங்களில் நேரடியாக காப்பீடு செய்யலாம்.

