/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பி.எம்., கிஷான் கவுரவ நிதி உதவி பிப்., 21 வரை சிறப்பு முகாம்
/
பி.எம்., கிஷான் கவுரவ நிதி உதவி பிப்., 21 வரை சிறப்பு முகாம்
பி.எம்., கிஷான் கவுரவ நிதி உதவி பிப்., 21 வரை சிறப்பு முகாம்
பி.எம்., கிஷான் கவுரவ நிதி உதவி பிப்., 21 வரை சிறப்பு முகாம்
ADDED : பிப் 14, 2024 11:44 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 'பி.எம்., கிஷான் கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ், விடுபட்ட பயனாளிகளின் விபரம் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, பிரதமர் கிஷான் திட்டத்தில், ஆண்டுக்கு 6,000 ரூபாய், மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது.
தகுதியுள்ள பயனாளிகள் தொடர்ந்து பயன்பெறுவதற்கு, நில விபரம், ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை பி.எம்., கிசான் இணையதளத்தில் உறுதி செய்யப்பட வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில், இதுவரை தகுதியுள்ள 3,980 விவசாயிகள், 'பி.எம்., கிஷான்' கவுரவ நிதியுதவி தொகை பெறுவதற்கு பதிவு செய்யாமல் நிலுவையில் இருப்பது தெரிய வருகிறது.
தகுதியுள்ள பயனாளிகளின் விபரங்களை பதிவேற்றம் செய்ய, நாளை முதல் 21ம் தேதி வரை, வேளாண்மை மற்றும் சார்ந்த துறை அலுவலர்கள், சிறப்பு முகாமில் பங்கேற்க உள்ளனர்.
இதுவரை, இத்திட்டத்தில் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

