/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்சோ குற்றவாளிக்கு மீண்டும் சிறை
/
போக்சோ குற்றவாளிக்கு மீண்டும் சிறை
ADDED : ஜூலை 25, 2025 10:10 PM
திருத்தணி:போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த வாலிபர், வழக்கை வாபஸ் பெற சிறுமியை மிரட்டியதால், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருத்தணி தாலுகாவைச் சேர்ந்த 11 வயது பள்ளி சிறுமி யிடம், கடந்தாண்டு திருத்தணி பட்டாபிராமபுரம் ஊராட்சி, மேல்விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார், 29, என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருத்தணி மகளிர் போலீசார், சரத்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமினில் வெளிவந்த சரத்குமார், கடந்த 16ம் தேதி, பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமியை மறித்து, 'என் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் உன்னையும், உன் பெற்றோரையும் கொலை செய்து விடுவேன்' என, மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, மகளிர் போலீசார், சரத்குமாரை கைது செய்து, நேற்று முன்தினம் இரவு மீண்டும் சிறையில் அடைத்தனர்.

