/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மரத்தில் விஷ குளவி கூடு சின்னம்மாபேட்டையில் பீதி
/
மரத்தில் விஷ குளவி கூடு சின்னம்மாபேட்டையில் பீதி
ADDED : ஆக 07, 2025 02:13 AM

திருவாலங்காடு:பனை மரத்தில் உள்ள விஷ குளவி கூடால், சின்னம்மாபேட்டையில் மக்கள் பீதியில் உள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சி பூஞ்சோலை நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு, குடியிருப்பு அருகே உள்ள பனை மரத்தில், விஷ குளவிகள் கூடு கட்டியுள்ளன. இவ்வழியே, 100 நாள் திட்ட பணியாளர்கள், விவசாயிகள் சென்று வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள குழந்தைகளும் விளையாடி வருகின்றனர்.
எதிர்பாராத விதமாக கூடு கலைந்தால், அவ்வழியே செல்வோர் குளவியின் விஷ கடிக்கு ஆளாக நேரிடும். எனவே, விஷ குளவி கூட்டை, வனம் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.