/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு
/
பொதட்டூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு
ADDED : ஜன 07, 2026 06:42 AM
பொதட்டூர்பேட்டை: குற்றச் சம்பவங்களை தடுக்க, காவல் நிலைய எல்லை பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோணசமுத்திரம், அத்திமாஞ்சேரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில், சமீபகாலமாக வழிமறித்து தாக்குதல் நடத்துவது, பஜார் பகுதிகளில் சிறு சிறு தகராறுகளில் ஈடுபடுவது என, குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில், பொதட்டூர்பேட்டை போலீசார் தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு, பகலாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், காலை - மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் கூடும் பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்திலும், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
போலீசாரின் இந்த கண்காணிப்பு பணி தொடர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

