/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது
/
சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது
ADDED : ஜன 07, 2026 06:42 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கலெக்டர் அலுவலகம் முன் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
தமிழக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பொறுப்பு நிர்வாகி லட்சுமி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.
ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின், திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் மறியலில் ஈடுபட்ட 570 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின், மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

