/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
80 சவரன், 38 லட்சம் ரூபாய் 'அபேஸ்' மூன்று பெண்கள் மீது போலீசில் புகார்

ADDED : ஏப் 12, 2025 12:18 AM
திருவள்ளூர்:திருவள்ளூர், காந்தி சாலையைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி, 31. இவரது மாமியார் ஷர்மிளா; பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார்.
அங்கு, புவனேஸ்வரியின் உறவினர் சரிதா, 30, அப்பகுதியைச் சேர்ந்த சுந்தரி, 30, ஆகியோர், தங்களது குழந்தையை டியூஷனுக்கு அழைத்து வரும்போது, மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022 அக்., 14ம் தேதி, ஷர்மிளா மற்றும் புவனேஸ்வரி ஆகியோரிடம், 'சுந்தரி மற்றும் அவரது உறவினர் குபேந்தரி ஆகியோர், தங்கம் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். அதில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்' என சரிதா ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதிக லாபம் கிடைக்கும் ஆசையில், 80 சவரன் நகை மற்றும் 38 லட்சம் ரூபாயை, புவனேஸ்வரி கொடுத்துள்ளார். ஆனால், பணமும் நகையும் கொடுக்காமல் இருவரும் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த புவனேஸ்வரி, இது குறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிந்து, சுந்தரி, குபேந்திரி மற்றும் சரிதா ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.