/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
2 மாதத்தில் 20 இடங்களில் திருட்டு 'குறட்டை' விடும் போலீசாரால் பீதி
/
2 மாதத்தில் 20 இடங்களில் திருட்டு 'குறட்டை' விடும் போலீசாரால் பீதி
2 மாதத்தில் 20 இடங்களில் திருட்டு 'குறட்டை' விடும் போலீசாரால் பீதி
2 மாதத்தில் 20 இடங்களில் திருட்டு 'குறட்டை' விடும் போலீசாரால் பீதி
ADDED : மே 26, 2025 11:35 PM
பொன்னேரி பொன்னேரி அடுத்த ஆசானபூதுார், மடிமைகண்டிகை, வீரங்கிமேடு உள்ளிட்ட கிராமங்களில், விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
ஆழ்துளை மோட்டார்கள் உதவியுடன், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. மேற்கண்ட கிராமங்களில் விவசாய மோட்டார்களுக்கு செல்லும் மின் ஒயர்கள் அடிக்கடி திருடுபோகின்றன.
சமூக விரோதிகள், மோட்டார் அறைகளின் பூட்டை உடைத்து, அங்குள்ள காப்பர் ஒயர்களை திருடி செல்கின்றனர். மேற்கண்ட கிராமங்களில் இரண்டு மாதங்களில், 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மோட்டார் ஒயர்கள் திருடு போயுள்ளன.
இதுதொடர்பாக, பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
காவல் நிலையத்தில் புகார் அளித்தால், எங்களை மோட்டார் அறைகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்த சொல்கின்றனர். மேலும், திருடியது யார் என விசாரித்து தெரிவிக்கவும் கூறுகின்றனர். மோட்டார் ஒயர்கள் திருடு போவதால், விவசாயம் மேற்கொள்வதே சிரமமாக உள்ளது.
காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரோந்து வாகனங்கள் பொன்னேரி நகரத்தையே சுற்றி வருகின்றன. கிராமப்புற பகுதிகளுக்கு வந்தால் தானே குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும்.
எனவே, ஆவடி கமிஷனரக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.