/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சவுடு மண் எடுப்பதில் தகராறு 5 பேர் மீது போலீசார் வழக்கு
/
சவுடு மண் எடுப்பதில் தகராறு 5 பேர் மீது போலீசார் வழக்கு
சவுடு மண் எடுப்பதில் தகராறு 5 பேர் மீது போலீசார் வழக்கு
சவுடு மண் எடுப்பதில் தகராறு 5 பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : அக் 30, 2024 06:33 PM
மணவாளநகர்:மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது பாப்பரம்பாக்கம். இங்கு தி.மு.க.,வை சேர்ந்த கோபி, 48 என்பவர், மூன்றாவது வார்டு உறுப்பினராக பதவி வகிக்கிறார்.
இவர், புதிதாக கட்டடம் கட்டுவதற்கு, சிலருடன் சேர்ந்து சவுடு மணல் விற்பனை செய்து வந்தார். இதில் இவருக்கும் ஆறாவது வார்டின் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் விஜயகுமார், 32 என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் நேற்று முன்தினம் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறிதது கோபி கொடுத்த புகாரின் படி விஜயகுமார், 32, மணிகண்டன், 25, விஜி, 27 ஆகியோர் மீதும், விஜயகுமார் கொடுத்த புகாரின் படி கோபி, 48, பெருமாள், 30 ஆகியோர் மீதும் மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.