/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வழக்கு பதியாத போலீசார் மதபோதகர்கள் முற்றுகை
/
வழக்கு பதியாத போலீசார் மதபோதகர்கள் முற்றுகை
ADDED : ஆக 22, 2025 09:51 PM
திருவாலங்காடு:பைக் திருடுபோன விவகாரத்தில், போலீசார் வழக்கு பதியாமல் அலட்சியமாக இருப்பதை கண்டித்து, திருவாலங்காடு காவல் நிலையத்தை 20க்கும் மேற்பட்ட மதபோதகர்கள் முற்றுகையிட்டனர்.
திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்குண்டா கிராமத்தில் வசிப்பவர் பார்த்திபன், 42. இவர், வீட்டின் அருகே சர்ச் அமைத்து, மத போதனை செய்து வருகிறார்.
கடந்த 26ம் தேதி வீட்டின் வெளியே, 'ஹோண்டா பேஷன் புரோ' பைக்கை நிறுத்தியிருந்தார்.
காலை வந்து பார்த்தபோது பைக் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுவரை வழக்கு பதியவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், பைக்கை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று காவல் நிலையத்தை, 20க்கும் மேற்பட்ட மதபோதகர்கள் முற்றுகையிட்டனர். வழக்கு பதிவதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.