/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலீஸ் குடியிருப்பு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியதால் அச்சம்
/
போலீஸ் குடியிருப்பு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியதால் அச்சம்
போலீஸ் குடியிருப்பு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியதால் அச்சம்
போலீஸ் குடியிருப்பு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியதால் அச்சம்
ADDED : ஜூன் 23, 2025 02:37 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சி, சித்துார் சாலையில் உள்ள டி.எஸ்.பி., முகாம் அலுவலக வளாகத்தில், போலீசார் குடியிருப்பு உள்ளது. இங்கு, 45க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன.
இந்நிலையில், டி.எஸ்.பி., முகாம் அலுவலகம் பின்புறமும், போலீஸ் குடியிருப்பு மையப்பகுதியில் உள்ள மரத்தில், மலை தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இந்த தேன்கூட்டால், அங்கு வசிக்கும் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும், டி.எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரியும் போலீசாரும் அச்சத்தில் உள்ளனர். சிறுவர்கள் விளையாட்டாக தேன்கூடு மீது கற்கள் வீசினால் மலைத்தேனீக்கள், டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளேயும், போலீஸ் குடியிருப்பு பகுதியில் பறந்து சென்று கடிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, உடனடியாக மாவட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு, போலீஸ் குடியிருப்பில் உள்ள தேன் கூட்டை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.