/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இளம்பெண் தற்கொலை முயற்சி வாலிபர் மீது போலீசார் வழக்கு
/
இளம்பெண் தற்கொலை முயற்சி வாலிபர் மீது போலீசார் வழக்கு
இளம்பெண் தற்கொலை முயற்சி வாலிபர் மீது போலீசார் வழக்கு
இளம்பெண் தற்கொலை முயற்சி வாலிபர் மீது போலீசார் வழக்கு
ADDED : பிப் 19, 2025 06:28 PM
கீழச்சேரி:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த, கீழச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் துளசி மகள் அனுஷா, 20. ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும், ஸ்ரீபெரும்புதுார் கச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன், 24, என்பவரும், ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன், சரவணன் அனுஷாவை மொபைல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அனுஷாவின் சகோதரர் எடுத்து பேசிய போது, சரவணன் அவரிடம் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார்.
இதனால், அனுஷா, சரவணனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி மதியம், சரவணன் அனுஷாவின் வீட்டிற்கு வந்து அவரை திருமணம் செய்து கொள்ள அழைத்துள்ளார். இதற்கு அனுஷா வர மறுத்ததையடுத்து, அவரை சரவணன் ஆபாசமாக பேசி கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார்.
இதனால் அவமானம் தாங்காத அனுஷா, தாய் பயன்படுத்தும் சுகர் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் வாயிலாக அவர் மீட்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, அனுஷா தந்தை துளசி அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.