/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கண்ட இடங்களில் மது அருந்தும் 'குடி'மகன்களுக்கு போலீசார் எச்சரிக்கை
/
கண்ட இடங்களில் மது அருந்தும் 'குடி'மகன்களுக்கு போலீசார் எச்சரிக்கை
கண்ட இடங்களில் மது அருந்தும் 'குடி'மகன்களுக்கு போலீசார் எச்சரிக்கை
கண்ட இடங்களில் மது அருந்தும் 'குடி'மகன்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜன 29, 2024 06:40 AM

சோளிங்கர்: சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே, வாலாஜாபேட்டை செல்லும் சாலையில், டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
காலை முதல் இரவு வரை இந்த கடையில் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கடையில் மதுபானம் வாங்கும் நபர்கள், கடையை ஒட்டியுள்ள, இந்திரா நகர் இரண்டாவது தெருவில் நின்றபடி மது அருந்துகின்றனர்.
இதனால், இந்த தெருவில் வசிப்போர் அதிருப்தியில் உள்ளனர். இரவு நேரத்தில் இங்குள்ள கடைகளின் வாசற்படிகளில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். இதனால், கடும் அதிருப்தியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் வாசற்படிகளில் முள்வேலி போட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில் சோளிங்கர் போலீசார், மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதாகைகளை, டாஸ்மாக் கடைக்கு அருகில் ஒட்டி வைத்துள்ளனர்.