/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளமான அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் பகுதிவாசிகள் அவதி
/
குளமான அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் பகுதிவாசிகள் அவதி
குளமான அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் பகுதிவாசிகள் அவதி
குளமான அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் பகுதிவாசிகள் அவதி
ADDED : நவ 15, 2024 01:49 AM

திருவள்ளூர்:சென்னை - பெங்களூர் தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ நீளச் சாலையை 2014-ல் 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2018-ல் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
இந் நெடுஞ்சாலையில் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டும் மழைநீர் வெளியேற வழியில்லை.
இதனால் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் சிறு மழைக்கே ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்ப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து சேதமடைந்த சாலை மற்றும் மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.