/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லட்சுமி வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்
/
லட்சுமி வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED : ஜன 14, 2024 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் கிராமத்தில் உள்ளது, ஸ்ரீலட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. பள்ளி வளாகத்தில், தாளாளர் சுகந்தி தலைமையில் பொங்கல் விழா நடந்தது.
இதில், பள்ளி மாணவர்கள் வகுப்பு வாரியாக பொங்கல் வைத்தனர். விழாவை ஒட்டி பள்ளி வளாகம் முழுதும் வண்ண வண்ண கோலங்கள் போடப்பட்டன.இதையடுத்து, உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் இயக்குனர் வேதா பரிசுகள் வழங்கினார்.
இதில், பள்ளி முதல்வர் பரமசிவம், தலைமையாசிரியர் லட்சுமணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்+.