/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
/
பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
ADDED : பிப் 08, 2025 08:58 PM
பொன்னேரி:பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் நேரடி பேருந்து சேவைகள் இல்லை. தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் வாயிலாக, பொன்னேரியில் இருந்து, மீஞ்சூர் வழியாக தத்தமஞ்சி மற்றும் ஊரணம்பேடு ஆகிய கிராமங்களுக்கு, டி27, டி29, டி44 ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாநகர பேருந்து, தடம் எண்.556, திருவொற்றியூரில் இருந்து, மீஞ்சூர், பொன்னேரி வழியாக பழவேற்காடு வரை, தினமும் இரண்டு முறை இயக்கப்படுகிறது.
பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து, பள்ளி, கல்லுாரிகளில் படிக்க, நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பொன்னேரி வந்து செல்கின்றனர்.
இந்த வழித்தடத்தில், மேற்கண்ட நான்கு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வரும் இவற்றை மட்டுமே நம்பி இருக்க வேண்டி நிலையில் உள்ளனர். அவற்றிலும் நெரிசலுடனும், படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும் பயணிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதை பயன்படுத்தி ஷேர் மற்றும் மேஜிக் ஆட்டோக்கள், நபர் ஒன்றுக்கு, 20 - 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். மாணவர்கள், கிராமவாசிகள் சிரமம் கருதி, பொன்னேரி - மீஞ்சூர் இடையே நேரடி பேருந்து சேவையை ஏற்படுத்திட வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

