/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநில வில்வித்தை போட்டி பொன்னேரி சிறுமி சாம்பியன்
/
மாநில வில்வித்தை போட்டி பொன்னேரி சிறுமி சாம்பியன்
ADDED : நவ 11, 2025 11:17 PM

பொன்னேரி: தமிழ்நாடு வில்வித்தை சம்மேளனம் சார்பில் நடந்த மாநில அளவிலான போட்டியில், பொன்னேரியைச் சேர்ந்த 12 வயது சிறுமி சாம்பியன் பட்டம் வென்றார்.
பொன்னேரி, கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத் மகள் வெனிசாஸ்ரீ, 12. வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
பொன்னேரியில் வில்வித்தை பயிற்சி பெறும் இவர், மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். நேற்று, தமிழ்நாடு வில்வித்தை சம்மேளனம் சார்பில், சென்னை தாம்பரத்தில் நடந்த, 18 வயதிற்கு உட்பட்டோருக்கான காம்பவுண்ட் பிரிவு போட்டியில் பங்கேற்று, அதிக புள்ளிகளுடன், இரண்டு தங்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
மேலும், 24 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், இரண்டு தங்க பதக்கம் வென்றார். மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்ற வெனிசாஸ்ரீயை, பயிற்சியாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
இந்த வெற்றியின் மூலம், 18 மற்றும் 25 வயதிற்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு அணியில் இடம் பிடித்துள்ளார். வரும் 25ம் தேதி அருணாச்சல பிரதேசம் இட்டா நகரிலும், டிச., 25ல் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடைபெறும் தேசிய வில்வித்தை போட்டிகளில், தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

